புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ‌ட்ரெ‌ய்ல‌ர்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 26 ஏப்ரல் 2022 (14:20 IST)

செல்வராகவன் - கீர்த்தி சுரேஷின் ‘சாணிக்காகிதம்’ டிரைலர்

saanikakitham
செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் சாம் சிஎஸ் இசையில் உருவான திரைப்படம் ‘சாணிக்காகிதம்’ 
 
இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து மே 6ஆம் தேதி அமேசான் ஓடிடியில் ரிலீசாக இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது
 
மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த படத்தின் டீசர் வெளியான நிலையில் சற்று முன் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது 
 
இந்த டிரைலரில் தாங்கள் எத்தனை கொலை செய்து உள்ளோம் என்பதை செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் கூறும் காட்சிகள் உள்ளன. இந்த காட்சிகள் படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஏற்கனவே அமேசான் ஓடிடியில் வெளியான பல படங்கள் ஹிட்டாகி நிலையில் இந்த படமும் ரசிகர்கள் மனதை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது