1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 26 ஏப்ரல் 2022 (09:26 IST)

விக்ரம் திரைப்படத்தின் டிரைலர்… உலகப் புகழ்பெற்ற திரைப்பட விழாவில்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் விக்ரம் திரைப்படம் வரும் ஜூன் மாதம் 3 ஆம் தேதி வெளியாக உள்ளது.

கமல் நடிப்பில் நான்காண்டுகளுக்குப் பிறகு ரிலீஸ் ஆகும் முதல் படமாக விக்ரம் உருவாகி வருகிறது. விக்ரம் திரைப்படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் ரிலீஸ் செய்ய உள்ளது. இந்நிலையில் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள கமல், விஜய் சேதுபதி மற்றும் பஹத் பாசில் ஆகிய மூவரின் கதாபாத்திரங்களைப் பற்றிய அறிமுகமாக ஒரு புதிய வீடியோவை இணையத்தில் வெளியிட, அது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதையடுத்து படத்தின் டிரைலர் ரிலீஸ் எப்போது இருக்கும் என்பது குறித்த எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில் இப்போது கேன்ஸ் திரைப்பட விழாவில் டிரைலர் ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகப்புகழ்பெற்ற திரைப்பட விழாக்களில் கேன்ஸ் திரைப்பட விழாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.