ஐஸ்வர்யா ராஜேஷ் மூலம் ராஜாவுக்கு செக் வைத்த சேரன்! டிரைலர் வீடியோ !
இயக்குநர் சேரன் மீண்டும் நடிப்பு, இயக்கம் என செயல்பட துவங்கியுள்ளார். தற்போது தனது அடுத்த ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
இயக்குனர் சாய் ராஜ்குமார் இயக்கத்தில் 'ராஜாவுக்கு செக்' என்ற படத்தில் நடித்துள்ளார். எமோஷனல் திரில்லராக உருவாகியுள்ள இப்படம் இது வரை யாரும் பார்த்திராத சேரனை கண் முன் கொண்டு வந்து நிறுத்தும் என படக்குழுவினர் தெரிவித்திருந்தனர் .
சேரனுடன் சிருஷ்டி டாங்கே, இர்பான் ஆகியோர் நடித்துள்ள இப்படத்திற்கு வினோத் எஜமான்யா இசையமைத்துள்ளார். இந்த நிலையில், இப்படத்தின் டிரைலர் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், இந்த டிரைலரை வெளியிட்டுள்ளார்.