1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. Samantha shy about her debut movies in tamil

“மோசமான நடிப்பு… அந்த படங்களைப் பார்த்தால் எனக்கே வெட்கமாக இருக்கிறது” – சமந்தா ஓபன் டாக்!

சமந்தா
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா 25 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உள்ளார்.  தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான நாக சைதன்யாவைத் திருமணம் செய்துகொண்டு சில ஆண்டுகளில் விவாகரத்துப் பெற்றார். கடந்த சில ஆண்டுகளாக அவர் மையோசிட்டிஸ் எனும் உடல்நலப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளதால்  அவர் அதிகமாக படங்களில் நடிக்கவில்லை.

சமீபகாலமாக அவர் நடித்த ‘குஷி’ மற்றும் ‘சகுந்தலம்’ ஆகிய படங்கள் தோல்விப் படங்களாக அமைந்தன. சமந்தா சில ஆண்டுகளுக்கு முன்னர்.  தாய்மொழியான தமிழில் தமிழில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்துக்கு பிறகு வேறு எந்த புதிய படத்திலும் அவர் கமிட்டாகவில்லை.

இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த நேர்காணலில் “என்னுடைய முதல் இரண்டு படங்களைப் பார்க்கவே எனக்கு வெட்கமாக இருக்கிறது. அந்த படங்களில் என்னுடைய நடிப்பு மோசமாக இருந்தது” எனக் கூறியுள்ளார். தமிழில் ‘பாணாக்காத்தாடி’ மற்றும் ‘மாஸ்கோவின் காவிரி’ ஆகிய இரு படங்களில்தான் அவர் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. 
அடுத்த கட்டுரையில்
எங்கள் தலைவி படத்தின் அப்டேட் கொடுங்கள்.. பிக்பாஸ் ரைசா ஆர்மியின் டிரெண்டிங்..!