Daily Horoscope
✕

பப்ளியான பொண்ணு வெகுளியான பையன்... எதையும் "ப்ளான் பண்ணி பண்ணனும்" ட்ரைலர்!

Written By papiskha
Updated: புதன், 11 மார்ச் 2020 (11:38 IST)
பானா காத்தாடி மற்றும் செம போதை ஆகாதே போன்ற படங்ககளை இயக்கிய இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் தற்போது நடிகர் ரியோவை வைத்து "ப்ளான் பண்ணி பண்ணனும்" படத்தை இயக்குகிறார். இப்படத்தில் ரியோவுக்கு ஜோடியாக நடிகை ரம்யா நம்பீசன் நடிக்கிறார்

சன் மியூசிக் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இளைஞர்களிடம் ஃபேமஸானவர் ரியோ ராஜ். அதில் கிடைத்த புகழை வைத்து சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து இல்லத்தரசிகளிடையேயும் படு பாப்புலர் ஆனார் ரியோ. அதையடுத்து சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கடந்த ஜூன் மாதம் வெளியானநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தில் ஹீரோவாக களமிறங்கினார். ஓரளவிற்கு ஓடி ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்ற அப்படத்தை தொடர்ந்து தற்போது இன்னொரு இன்னிங்ஸை துவங்கியுள்ளார் ரியோ.

பாசிட்டிவ் பிரிண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ரோபோ ஷங்கர், சந்தான பாரதி, ஆடுகளம் நரேன், முனீஷ்காந்த், பாஸ்கர் என்று இன்னும் ஏராளமானோர் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படம் மூலம் மூன்றாவது முறையாக பத்ரி வெங்கடேஷ் மற்றும் யுவன் ஷங்கர் ராஜா கூட்டணி உருவாகியுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்தது. இந்நிலையில் தற்போது "பிளான் பண்ணி பண்ணனும்" படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. யுவனின் துள்ளலான இசை படத்திற்கு மேலும் வலு சேர்க்கிறது.
 

எல்லாம் காட்டு

இயக்குநராக வெற்றி கிடைக்கவில்லை... நடிகராக அவதாரம் எடுக்கும் ஜேசன் சஞ்சய்?

விஜய தேவரகொண்டாவின் ரண பாலி!.. ரத்தம் தெறிக்கும் டிரெய்லர் வீடியோ!...

சீன் படத்தின் ’ஆத்தி இவ யார்றா’ பாடல் லிரிக் வீடியோ வெளியீடு!...

நாளை நான் இருப்பேனா தெரியாது!.. மரணத்தை முன்பே கணித்த நானா படேகர்!...

மீண்டும் தியேட்டருக்கு வரும் 96

அடுத்த கட்டுரையில்
Show comments