ஒரே டைரக்டரில் துவங்கி, ஒரே டைமில் டேடி ஆகப்போறோம் - பூரிப்பில் ரியோ - சஞ்சய் !

papiksha| Last Updated: புதன், 4 மார்ச் 2020 (15:42 IST)

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ராஜா-ராணி சீரியல் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் அந்த சீரியல் முடிந்தது. இந்த சீரியலில் செம்பா-கார்த்திக் வேடத்தில் நடித்ததன் மூலம் ஆல்யா மானசா-சஞ்சீவ் இருவரும் நிஜ காதலர்களாக மாறினர்.

இதையடுத்து திடீரென யாருக்கும் சொல்லாமல்
ரகசியமாக திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில் தற்போது ஆல்யா நிறைமாத கர்ப்பிணியாக இருகிறார். விரைவில் இவர்களுக்கு குட்டி பாப்பா பிறக்க உள்ளது. இதே போல்
சன் மியூசிக் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இளைஞர்களிடம் ஃபேமஸானவர் ரியோ ராஜ். அப்போது அதே தொலைக்காட்சியில் வேலை பார்த்த ஸ்ருதி என்பவரை காதலித்து பெற்றோர்களின் சம்மதத்துடன் கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 9 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர்.

இந்நிலையில் தற்போது ஸ்ருதி கர்ப்பமாக இருக்கிறார். கர்ப்பமாக இருக்கும் இந்த இரு ஜோடிகளும் ஒன்றாக சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சஞ்சீவ் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு 'ஒரே டைரக்டரிடம் ஹீரோ, இப்போ ஒரே டைம்ல டாடி ஆக போறோம், அதுவும் ஒரே ஹாஸ்பிடலில் பாக்கபோறோம் என மிகுந்த மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். இந்த இரண்டு அழகிய தம்பதிகளுக்கும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :