யோகிபாபுவுக்கு ஜோடியாகும் பிக்பாஸ் நடிகை
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகை யாஷிகா, ஏற்கனவே ஒருசில படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள நிலையில் தற்போது யோகிபாபு ஹீரோவாக நடிக்கவுள்ள ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.
கொரிய படத்தின் ரீமேக் படமான இந்த படம் ஒரே இரவில் நடக்கும் த்ரில் கலந்த காமெடி படம் என்றும், இந்த படத்தில் ஹீரோ, ஹீரோயின், வில்லன், காமெடியன் எல்லாமே கதைதான் என்றும் இந்த படத்தை இயக்கும் புவன் நல்லான் கூறியுள்ளார். இவர் 'மோ' என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்திற்கு 'ஜாம்பி' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த படத்தின் முன்னணி நடிகர், நடிகையாக யோகிபாபுவும் யாஷிகாவும் நடிக்கவுள்ளதாகவும் இயக்குனர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த படத்தில் யூடியூப் புகழ் கோபி சுதாகர், "லைப் ஆப் பை" புகழ் டி.எம்.கார்த்திக், கோகிலா" அன்பு தாசன், பிஜிலி ரமேஷ், ராமர், லொள்ளு சபா மனோகர், "மியூசிக்கலி" புகழ் சித்ரா, உள்பட பலர் நடிப்பதால் காமெடி உறுதி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது