யோகிபாபுவுடன் குத்தாட்டம் போடும் 'சிறுத்தை' பட நடிகை
கோலிவுட் திரையுலகின் நம்பர் ஒன் காமெடி நடிகரான யோகிபாபு அஜித், விஜய் படங்கள் உள்பட பல திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் 'தர்மபிரபு' என்ற படத்தில் நாயகனாகவும் நடித்து வருகிறார்.
எமலோகம் சம்பந்தப்பட்ட காமெடி படமான இந்த படத்தில் யோகிபாபு எமதர்மனின் மகனாகவும், ராதாரவி எமதர்மனாகவும் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்காக ரூ.2 கோடி செலவில் எமலோகம், சொர்க்கம், நரகம் போன்ற செட் போடப்பட்டுள்ளது.
வரும் 14ஆம் தேதி முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில் இந்த படத்தில் யோகிபாபுவுடன் நடிகை மேக்னா நாயுடு ஒரு குத்தாட்ட பாடலில் நடனமாடவிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. மேக்னா நாயுடு, கார்த்தி நடித்த 'சிறுத்தை' உள்பட ஒருசில தமிழ் படங்களிலும் பல மலையாள, தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.
ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கும் இந்த படத்தை முத்துகுமார் என்பவர் இயக்கி வருகிறார்.