ஆம், நான் கர்ப்பமாக இருக்கிறேன்! புகைப்படத்துடன்தெரிவித்த பிக் பாஸ் சுஜா !
பிக் பாஸ் பிரபலம் சுஜா வருணி தான் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்து முதன்முதலாக புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் சுஜா வருணி. பல விளம்பர படங்களில் நடித்திருந்தாலும் பிக் பாஸில் பங்குபெற்ற பிறகுதான் தன்னை யார் என்று அடையாளம் காட்டிக்கொண்டார்.
ஆனால் பிக் பாஸில் அவருக்கு எதிர்மையான கருத்துக்களையே தெரிவித்தனர் மக்கள். காரணம் இவரின் சுயரூபத்தை மக்கள் விரும்பவில்லை . இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், ராம் குமாரின் மகனுமான சிவகுமாரை பல ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்துகொண்டு நடிகர் திலகம் சிவாஜி வீட்டின் மருமகளாக ஆகியுள்ளார்.
இந்நிலையில் திருமணம் முடிந்து சில மாதங்கள் ஆன நிலையில் தற்போது சுஜா வருணி கர்ப்பமாக இருக்கிறார். அதனை அவரே புகைப்படத்தின் மூலம் தெரிவித்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.