திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 30 அக்டோபர் 2018 (18:36 IST)

யாஷிகாவிடம் படுக்கைக்கு ரேட் பேசிய போலீஸ்காரர்

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான யாஷிகா போலீஸ்காரர் ஒருவர் தன்னிடம் படுக்கைக்கு ரேட் பேசியதாக கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
நடிகர் கவுதம் கார்த்திக் நடிப்பில் ஏ படமாக வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்திருந்தார் யாஷிகா. அதன் பின்னர் நோட்டா படத்திலும் நடித்தார். இதற்கு இடையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். 
 
இந்நிலையில், அவர் சமீபத்தில் எனது அப்பா வயதுடைய இயக்குனர் ஒருவர் என்னிடம் தவறாக நடந்துகொண்டதாக் கூறியிருந்தார். தற்போது போலீஸ்காரர் ஒருவர் தன்னிடம் தகாத முரையில் பேசியதாக கூறியுள்ளார். 
 
ஒரு முறை நான் என் நண்பர்களுடன், சாலையில் நின்றுக்கொண்டிருந்த போது போலீஸ்காரர் ஒருவர் வந்து உன் ரேட் என்னவென என்னிடம் கேட்டார். இதை கண்டு ஆத்திரமடைந்த என் நண்பர் போலீஸாரை அடித்து பிரச்சனை ஆனது. 
 
பின்னர் இது குறித்து நான் போலீஸில் புகார் அளிக்க சென்ற போது அவர்கள் இதை கண்டுக்கொள்ளவில்லை என யாஷிகா தெரிவித்துள்ளார்.