1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. A young man harassed women in flight

பெண் பயணியை கண்ட இடத்தில் தொட்ட வாலிபர்: அலேக்காய் தூக்கிய போலீஸ்

வாலிபர்
விமானத்தில் வாலிபர் ஒருவர் பெண் பயணியிடம் அத்துமீறியதற்காக அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
 
மும்பையை சேர்ந்த சந்திர திருப்பதி என்ற வாலிபர், சுற்றுலாவிற்காக பாங்காக் சென்றுள்ளார். அங்கு ஜாலியாக சுற்றுலாவை முடித்துக் கொண்டு அவர் விமானத்தில் மும்பை திரும்பியுள்ளார்.
 
அப்போது விமானத்தில் தன்னுடன் பயணித்த சக பெண் பயணியிடம் சந்திர திருப்பதி அத்துமீறியுள்ளார். அந்த பெண் பயணியை கண்ட இடத்தில் தொட்டு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதுகுறித்து உடனடியாக அந்த பெண் விமான ஊழியர்களிடம் புகார் தெரிவித்தார். விமானம் மும்பை வந்ததும், சந்திரதிருப்பதியை சிஐஎஸ்எஃப் போலீஸார் அதிரடியாக கைது செய்தார்கள்.
 
இதனையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். 
அடுத்த கட்டுரையில்
எம் ஜி ஆர் சிகிச்சை ஆவணங்களைப் பற்றி சொல்லமுடியாது –அப்போல்லோ நிர்வாகம் பதில் மனு