கொஞ்சம் பொறுமையாக இருங்கள்… ரசிகர்களுக்கு யாஷ் வேண்டுகோள்!
கேஜிஎஃப் படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலம் ஆகியுள்ளார் யாஷ்.
யாஷ் நடித்து பிரசாத் நீல் இயக்கத்தில் வெளியான படம் கேஜிஎஃப் மற்றும் கேஜிஎஃப் சாப்டர் 2. சமீபத்தில் வெளியான கேஜிஎஃப் 2 மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்த பாகத்திற்கான லீடும் இரண்டாம் பாகத்தில் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில் யாஷ் இப்போது இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் நடிகராகியுள்ளார் யாஷ்.
இன்னும் அவரின் அடுத்த படத்தினை அறிவிக்கவில்லை. இதுகுறித்து ரசிகர்கள் அவ்வப்போது அவரிடம் அப்டேட் கேட்டு அன்பு தொல்லை கொடுத்து வருகின்றனர்.
இதுபற்றி இப்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள அறிக்கையில் “ உங்கள் மாசற்ற அன்புக்கு நன்றி. இந்த வருடம் என் பிறந்தநாளை உங்களோடு செலவிட முடியவில்லை. இந்த வருடம் நான் உங்களுக்கு சிறப்பான பரிசு ஒன்றை தவிர கடினமாக உழைத்து வருகிறேன். உங்கள் காத்திருப்புக்கு நான் கண்டிப்பாக நியாயம் செய்வேன்” எனக் கூறியுள்ளார்.