வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 5 ஜனவரி 2023 (16:21 IST)

ரயில்நிலைய பிளாட்பார்மில் இளம்பெண்ணில் சடலம்! மக்கள் அதிர்ச்சி

karnataka
கர்நாடக மாநிலம் பெங்களூரில் யஷ்வந்த்பூர் ரயில்  நிலையத்தின் பிளாட்பாரத்தில் ஒரு இளம்பெண் சடலம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் முதல்வர் பசுவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது.

இங்குள்ள பெங்களூர் மாநகரத்தின் யஸ்வந்த்பூர் ரயில் நிலையத்தின் 1 வது பிளாட்பாரத்தில் உள்ள ஒரு டிரம்மில் இன்று காலையில் அதிக  நாற்றம் வந்துள்ளது.

இதன் அருகில் சென்று பார்த்த துப்புறவு பணியாளர்கள் அதில், ஒரு இளம்பெண்ணில் சடலம் அழுகிய நிலையில் இருப்பதைப் பார்த்து, அதிர்ச்சி அடைந்து, போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், பெண்ணின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்தப் பெண் யாரென்று இன்னும் கண்டுப்பிடிக்கப்படாத நிலையில், இந்த  பெண் கொலை, அல்லது தற்கொலை செய்யப்பட்டு 2 நாட்கள் இருக்கலாம் என தகவல் வெளியாகிறது. போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.