ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 7 மார்ச் 2022 (23:21 IST)

ஆண்களைப் போலவே பெண்களும் சம ஜீவி- கமல்ஹாசன் டுவீட்

உலகம் முழுவதும் மார்ச் 8 ஆம் தேதி மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இதற்கு                  அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்

இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி  மய்யம்  என்ற கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் மகளிர் தினத்தை முன்னிட்டு  வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில்,  தேவதையென்றோம். தெய்வம் என்றோம். யதார்த்தம் உணர்ந்து, ஆண்களைப் போலவே பெண்களும் சம ஜீவியென்று சொல்லத் தொடங்கியிருக்கிறோம். அதன் அடையாளமான பெண்கள் தினத்தில் சக பயணிகளை வாழ்த்துகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.