வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 17 மே 2021 (08:30 IST)

இனம் படத்தில் ஓடிடி வெளியீட்டால் மீண்டும் சர்ச்சை கிளம்புமா?

இயக்குனர் சந்தோஷ் சிவன் இயக்கத்தில் லிங்குசாமி வெளியிட்ட இனம் திரைப்படம் இப்போது ஓடிடியில் ரிலிஸாக உள்ளது.

2013 ஆம் ஆண்டு சந்தோஷ் சிவன் இயக்கத்தில் இனம் என்ற திரைப்படம் வெளியாகியிருந்தது. அந்த படம் ஈழத்தைக் கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்ட படம். அதன் துணைத்தலைப்பாக the mob (அதாவது கூட்டம்) என்று தமிழர்களை இழிவு செய்யும் பொருள் கொண்டு குறிப்பிடப்பட்டு இருந்தது. மேலும் படமும் இலங்கை தமிழ் மக்களை இழிவுபடுத்தும் விதமாக இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து திரையுலகினர் பலரும் எதிர்ப்புத் தெரிவித்ததை அடுத்து 3 நாட்களில் திரையரங்குகளில் இருந்து தூக்கப்பட்டது. மேலும் படத்தை வெளியிட்ட இயக்குனரும் தயாரிப்பாளருமான லிங்குசாமி மன்னிப்புக் கேட்டார்.

இந்நிலையில் 7 ஆண்டுகளுக்குப் பின்னர் அந்த படம் மீண்டும் இப்போது ஓடிடியில் ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ் அமைப்புகளிடம் இருந்து மீண்டும் எதிர்ப்புக்குரல்கள் உருவாகலாம் என சொல்லப்படுகிறது.