திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 9 டிசம்பர் 2020 (15:34 IST)

ரஜினி பிறந்தநாளில் அண்ணாத்த அப்டேட்டா? சன் பிக்சர்ஸ் திட்டம்?

நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு அண்ணாத்த படத்தின் டீசர் வெளியாகலாம் என சொல்லப்படுகிறது.

ரஜினியின் அரசியல் வருகை உறுதியாகிவிட்ட நிலையில் அண்ணாத்ததான் அவரின் கடைசி திரைப்படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. ரஜினிகாந்தின் வயது மற்றும் உடல்நிலை காரணமாக அரசியல் மற்றும் சினிமா என இரட்டைக் குதிரையில் அவரால் பயணிக்க முடியாது என்பதால் அவர் சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிடலாம் என்ற முடிவில் உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

அண்ணாத்த படப்பிடிப்பு டிசம்பர் 15 ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. கொரோனா அச்சம் அதிகமாக உள்ள நிலையில் படக்குழுவினர் அனைவரையும் உள்ளடக்கிய பயோபபுள் உருவாக உள்ளதாக சொல்லப்படுகிறது. ஐபிஎல் தொடரில் சன் நிறுவனத்தின் சன் ரைசர்ஸ் ஹைதரபாத் அணிக்கு இதே போல பயோ பபுள் உருவாக்கி கலந்து கொள்ள வைத்ததைப் போல இப்போது அண்ணாத்த படக்குழுவுக்கு பயோபபுள் உருவாக உருவாகிறது.

டிசம்பர் 12 ஆம் தேதி ரஜினிகாந்த் தனது 70 ஆவது பிறந்தநாளைக் கொண்டாட உள்ளார். இதையடுத்து அவரின் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக அண்ணாத்த படத்தின் டீசரை வெளியிடலாமா என்ற யோசனையில் சன் பிக்சர்ஸ் உள்ளதாக சொல்லப்படுகிறது.