திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 9 டிசம்பர் 2020 (12:52 IST)

சினிமா கனவில் திரிபவர்களுக்கு வாய்ப்பு! – கேஜிஎப் இயக்குனரின் சர்ப்ரைஸ் அறிவிப்பு!

பிரபல கேஜிஎப் படத்தின் இயக்குனரின் அடுத்த படத்தில் நடிக்க புதியவர்கள் விண்ணப்பிக்கலாம் என தயாரிப்பு நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கண்ணுக்கு தெரியாமல் இருந்த கன்னட சினிமாவை கேஜிஎஃப் மூலமாக உலகறிய செய்தவர் இயக்குனர் பிரசாந்த் நீல். கேஜிஎஃப் இரண்டாம் பாகத்திற்கான பணிகள் முடிந்துவிட்ட நிலையில் தனது அடுத்த பட வேலைகளில் மும்முரமாக இறங்கியுள்ளார் பிரசாந்த் நீல்.

பிரபாஸை ஹீரோவாக வைத்து உருவாகும் இந்த படத்திற்கு ‘சலார்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை கேஜிஎஃப் படத்தை தயாரித்த ஹம்போலே நிறுவனமே தயாரிக்கிறது. இந்நிலையில் இந்த படத்தில் நடிக்க சினிமாவில் வாய்ப்பு தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு வாய்ப்பளிக்க தயாரிப்பு நிறுவனம் மற்றும் இயக்குனர் முடிவெடுத்துள்ளனர்.

இதற்காக தெலுங்கானா, பெங்களூரு மற்றும் சென்னையில் ஆடிஷன்கள் நடத்தி ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். வரும் 15ம் தேதி தெலுங்கானாவில் ஆடிஷன் நடைபெறும் நிலையில், விரைவில் சென்னையிலும் ஆடிஷன் நடைபெற உள்ளதாக ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ள பிரசாந்த் நீல் “இது நீங்கள் ஒளிர்வதற்காக தருணம்” என தெரிவித்துள்ளார்.