'அஜித்தின் விடாமுயற்சி ட்ராப் ஆகும், இல்லன்னா?'.... பிரபல பத்திரிக்கையாளர் அதிர்ச்சி தகவல்!
துணிவு படத்துக்குப் பிறகு அஜித் நடிக்கும் விடாமுயற்சு திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, மகிழ்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். இந்தபடத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னே வெளியாகி இருந்தாலும் இன்னும் அடுத்த கட்ட பணிகள் நடக்கவில்லை. ஷூட்டிங் எப்போது என்பதும் தெரியவில்லை.
அதற்கு முக்கியக் காரணம் சமீபத்தில் லைகா நிறுவனத்தில் ரெய்ட் நடந்ததுதான் என்று சொல்லப்படுகிறது. இதன் காரணமாக அந்த நிறுவனம் பொருளாதார சிக்கலில் உள்ளதாக சொல்லப்படுகிறது. அதனால் அஜித் விடாமுயற்சி படத்தை லைகா நிறுவனத்தோடு தொடர்வதா இல்லை வேறு நிறுவனத்துக்குக் கைமாற்றலாமா என்ற குழப்பத்தில் உள்ளதாக சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.
இந்நிலையில் தமிழ் சினிமா பற்றி பல தகவல்களைக் கொடுத்துவரும் பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு, இந்த படம் ஜூன் 7 ஆம் தேதி தொடங்காவிட்டால் படத்தை அஜித் ட்ராப் செய்துவிடுவார். இல்லையென்றால் வேறு நிறுவனம் படத்தைத் தயாரிக்கும் எனக் கூறி அஜித் ரசிகர்கள் மத்தியில் பீதியைக் கிளப்பியுள்ளார்.