நேர்காணல் கேட்ட சன் டிவி… நோ சொன்ன விஜய்- இதனால்தான் கோட் வியாபாரம் கைமாறியதா?
விஜய் நடித்து வரும் GOAT திரைப்படத்தின் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த படத்தில் அவரோடு பிரசாந்த்,பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்க வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இந்த படத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. அந்த மூன்று வேடங்களுக்கும் மூன்று கெட்டப்கள் என்றும் சொல்லப்படுகிறது. ஷூட்டிங் முடிந்துள்ள நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் வேலைகள் நடந்துவரும் நிலையில் படத்தின் அனைத்து மொழிகளுக்குமான சேட்டிலைட் உரிமையை ஜி நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
முன்னதாக இந்த படத்தை சன் டிவி நிறுவனம்தான் கைப்பற்றுவதாக இருந்தது. ஆனால் படத்துக்கான சன் நிறுவனத்துக்கும் விஜய்க்கும் ஏற்பட்ட ஒரு கருத்து வேறுபாட்டால்தான் இந்த படம் ஜி நிறுவனத்துக்குக் கைமாறியதாக சொல்லப்படுகிறது. படத்தை வாங்கவேண்டுமென்றால் விஜய் தங்கள் சேனலுக்கு எக்ஸ்க்ளூசிவ்வாக ஒரு பேட்டி அளிக்க வேண்டும் என சன் நிறுவனம் கேட்க, அதற்கு விஜய் மறுத்துவிட்டாராம். அதன் பிறகுதான் இந்த படத்தை வாங்கும் முடிவில் இருந்து சன் நிறுவனம் பின்வாங்கியதாக சொல்லப்படுகிறது.