வியாழன், 19 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: சனி, 16 நவம்பர் 2024 (15:31 IST)

வாழு.. வாழவிடு.. நயன் தாராவை அடுத்து விக்னேஷ் சிவனின் இன்ஸ்டா பதிவு...!

நடிகை நயன்தாரா தனுஷ் மீது பகிரங்கமாக பகீர் குற்றச்சாட்டு வைத்த நிலையில், அவர் பதிவு செய்த மூன்று பக்க அறிக்கை இணையதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வெறும் மூன்று வினாடி காட்சியை பயன்படுத்திற்காக 10 கோடி ரூபாய் இழப்பீடு கேட்ட தனுஷின் உண்மை முகம் வெளிப்பட்டு விட்டது என நெட்டிசன்கள் இந்த அறிக்கை குறித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
 
இந்த நிலையில்,  நயன்தாராவை அடுத்து, அவரது கணவர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனுசை மறைமுகமாக குறிப்பிட்டு ஒரு பதிவு செய்துள்ளார். வாழு.. வாழ விடுங்க" என்ற தனுஷின் பழைய வசனத்தை பேசிய விக்னேஷ் சிவன், "அன்பை பரப்புங்கள்.. ஓம் நமச்சிவாயா" என்று கூறியுள்ளார்.
 
இதையெல்லாம் காணும் உண்மையான ரசிகர்களுக்காகவும், அடுத்தவரின் மகிழ்ச்சியில் மகிழ்ச்சி காணும் வகையில் மாற வேண்டும் என இறைவனை வேண்டிக்கொள்கிறேன் என நயன்தாரா ஆவணப்படம் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்தார்.
 
மேலும், "மூன்று வினாடி காட்சிக்காக பத்து கோடி ரூபாய் கேட்ட காட்சி இதுதான்" என்று அவர் அந்த வீடியோவையும் வெளியிட்டுள்ள நிலையில், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
 
 
Edited by Mahendran