செவ்வாய், 17 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: சனி, 16 நவம்பர் 2024 (15:38 IST)

தனுஷூக்கு எதிரான குற்றச்சாட்டு.. நயனுக்கு குவியும் ஆதரவு.. இத்தனை நடிகைகளா?

நடிகர் தனுசுக்கு எதிராக நடிகை நயன்தாரா குற்றம் சாட்டிய நிலையில், இந்த குற்றச்சாட்டுக்கு நடிகைகள் பலர் ஆதரவு தெரிவித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
நடிகை நயன்தாரா குறித்து வெளியிட்ட அறிக்கையில், நானும் ரவுடிதான் படத்தின் காட்சிகளை பயன்படுத்தியதற்காக பத்து கோடி ரூபாய் நஷ்ட ஈடு தனுஷ்  கேட்டதாக குறிப்பிட்டு இருந்தார்.
 
தனது சமூக வலைதள பக்கத்தில் இது குறித்த மூன்று பக்க கடிதத்தை நயன்தாரா பதிவு செய்துள்ள நிலையில், அந்த பதிவுக்கு நடிகைகள் பார்வதி, ஐஸ்வர்யா ராஜேஷ், ஐஸ்வர்யா லட்சுமி, ஸ்ருதிஹாசன், அனுபமா பரமேஸ்வரன், நஸ்ரியா, கௌரி கிஷான், காயத்ரி சங்கர், நமீதா கிருஷ்ணமூர்த்தி, அபிராமி உள்ளிட்ட பலரும் லைக் செய்துள்ளனர்.
 
மேலும் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் தனது ஆதரவை தெரிவித்துள்ளார். இதை வைத்து பார்க்கும் போது, தனுஷால் இவர்களும் பாதிக்கப்பட்டிருப்பார்களோ என்ற சந்தேகத்தை சிலர் எழுப்பி வருகின்றனர். இவர்களில் ஸ்ருதிஹாசன், பார்வதி, அனுபமா பரமேஸ்வரன், நஸ்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் தனுஷுடன் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
Edited by Mahendran