செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 14 ஜனவரி 2022 (14:22 IST)

''என்ன நடிப்பு''...அல்லு அர்ஜூனை பாராட்டிய விஜய் பட இயக்குநர்

அல்லு அர்ஜுன் நடித்த ‘புஷ்பா’ திரைப்படத்தை விஜய் பட இயக்கு நர் பாராட்டியுள்ளார்.

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, சமந்தா நடிப்பில் உருவான ‘புஷ்பா’ திரைப்படம் டிசம்பர் 17ஆம் தேதி வெளியானது என்பதும் இந்த படம் உலகம் முழுவதும் வசூலை வாரி குவித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அமேசான் ஓடிடியில் ‘புஷ்பா’ திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது ஜனவரி 7ஆம் தேதி ‘புஷ்பா’ திரைப்படம் அமேசான் ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தை  முன்னணி  நடிகர்கள்,இயக்கு நர்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் பாராட்டி வருகின்றனர்.

 இ ந் நிலையில்  கோலமாவு கோகிலா,  டாக்டர்,  பீஸ்ட் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ள  இயக்கு நர்  நெல்சன் திலீப்குமார் பாராட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், புஷ்பா என்ன ஒரு படம்!  அற்புதமான நடித்துள்ளார் அல்லு அர்ஜூன். பாக்ஸ் ஆபிஸில் வெடித்தது ஆச்சர்யமல்ல எனத் தெரிவித்துள்ளார்.