திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : சனி, 17 ஜூலை 2021 (23:22 IST)

நடிகர் விஜய்யை மறக்க மாட்டோம்…பிரபல நடிகரின் குடும்பம் உருக்கம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய். இவர் தற்போது, நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார். நடிகர் விஜய்யின் விஜய் மக்கள் இயக்கம் மக்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவி செய்து வரும் நிலையில் கொரோனா ஊரடங்கின்போதும் முதல்வர் நிவாரண நிதியாக விஜய் உதவி செய்தார்.

இந்நிலையில், விஜய்யின் அன்புள்ளத்தைப் பற்றி தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் நாசர் நடிகர் மனோபாலாவின் யூடியூப் சேனலுக்குப் பேட்டியளித்துள்ளார்.

அதில், என் மூத்த மகள் விஜய்யின் தீவிர ரசிகன். விபத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டது.  வீல் சேரில்தான் அமர்ந்திருப்பார். அவருக்கு இப்போதும் ஞாபசக்தி இல்லை. ஆனால் எங்கள் வீட்டில் எப்போதும் விஜய் சார் என்றால அவருக்கு ஞாபகம் வரும். விஜய் சாரில் பாடல்களை படங்களைப் பார்ப்பார். என் மகனின் பிறந்தநாளுக்கு விஜய் சார் நேரில் வந்து வாழ்த்துவார். என மகன் மகிழ்ச்சியைந்தார் எனத் தெரிவித்துள்ளார்.

 இந்த வீடியோவுக்கு நடிகர் நாசரின் மனைவி கமீலா, தம்பி விஜய் அவர்களை எங்கள் வாழ்நாளில் மறக்க மாட்டோம் எனத் தெரிவித்துள்ளார்.