திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 28 ஜூன் 2021 (17:34 IST)

விஜய் ரசிகர்கள் உடலுறுப்புகள் தானம் !

நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் உடல் உறுப்பு தானம் செய்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய். இவர் கடந்த ஜூன் 22 ஆம் தேதி தனது 47 வது பிறந்தநாள் கொண்டாடினார். இந்திய திரையுலக நட்சத்திரங்கள்  இவரது பிறந்தநாளி போது வாழ்த்துகள் தெரிவித்தனர்.

அன்று, விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தும் விதமான, நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துவரும்  பீஸ்ட் படத்தின் முதல் மற்றும் இரண்டாம் லுக் போஸ்டர்கள் வெளியானது.

இந்நிலையில், விஜயின் ரசிகர்கள்  அவரது பிறந்தநாளை முன்னிட்டு உடலுறுப்புகள் தானம் செய்துள்ளனர்.  இதுகுறித்த தகவலை விஜய்யின் பி.ஆர்.ஓ ரியாஸ் அகமத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார். இது வைரலாகி வருகிறது. மக்கள் இவர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.