திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : வியாழன், 19 மார்ச் 2020 (11:18 IST)

விஜய் டிவி மேடையில் அசிங்கப்பட்ட மணிமேகலை - சவால் விட்டு சபதம் ஏற்ற வீடியோ இதோ !

தொகுப்பாளினி மணிமேகலை சன் மியூசிக் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இளசுகள் மத்தியில் பிரபலமடைந்தார். கடந்த 2017ம் ஆண்டு பெற்றோர் சம்மதமின்றி நடன இயக்குனரான காதர் ஹுசைனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் காதலுக்கு வீட்டில் சம்மதம் தெரிவிகத்ததால் தற்போது கணவருடன் தனியாக வசித்து வருகிறார்.

இந்நிலையில் இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான மிஸ்டர் & மிஸ்டர்ஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றனர். அதையடுத்து சமீபத்தில் நடந்து முடிந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மணிமேகலை பங்குபெற்றார். இந்நிலையில் தற்போது  தனது இன்ஸ்டாகிராமில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கணவருடன் 'மரண மாஸ்" நடனமாடிய வீடியோவை பதிவிட்டுள்ளார்.

ஹுசைனுக்கு நிகராக நடனமாட முடியாததால் திக்குமுக்கடுகிறார் மணிமேகலை. ஆனால், ஹுசைன் மணிமேகலையைத் தூக்கி வளைத்து பயங்கரமாக டான்ஸ் ஆடுகிறார். ஒரு கட்டத்தில் டான்ஸ் ஆடமுடியாமல் மணிமேகலை கீழே விழுந்து விடுகிறார். எனவே " முதல்ல டான்ஸ் ஆட கத்துக்கணும். அப்படி இல்லன்னா இந்த டான்ஸ் ஆட தெரிஞ்ச பயலுகலோட ஷோ பண்ண கூடாது. ஆட தெரியாம ரொம்ப பப்பி ஷேமா போச்சு...  ஹுசைன் உனக்கு நான் சவால் விடுகிறேன் ஒரு பெரிய டான்ஸரா வந்து காமிக்கிறேன் என்று திவிட்டுள்ளார்.