திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : வெள்ளி, 6 டிசம்பர் 2019 (17:28 IST)

எந்த சூழ்நிலையிலும், எப்போதும் உன் கூடவே இருப்பேன்: வைரல் ஆகும் திருமண வீடியோ!

தொகுப்பாளினி மணிமேகலை சன் மியூசிக் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இளசுகள் மத்தியில் பிரபலமடைந்தார்.  கடந்த 2017ம் ஆண்டு பெற்றோர் சம்மதமின்றி நடன இயக்குனரான காதர் ஹுசைனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் காதலுக்கு வீட்டில் சம்மதம் தெரிவிகத்ததால் தற்போது கணவருடன் தனியாக வசித்து வருகிறார். 
 
இந்நிலையில் தற்போது தங்களது இரண்டாவது திருமண ஆண்டை மகிழ்ச்சியுடன் கொண்டதை வருகின்றனர். அந்தவகையில் தனது மகிழ்ச்சியை ரசிகர்களின் பகிர்ந்துகொள்ளும் விதமாக இன்ஸ்டாகிராமில் திருமண வீடியோ ஒன்றை முதன் முறையாக வெளியிட்டுள்ளார் மணிமேகலை. 
 
"டிசம்பர் 6, 2017 - சென்னை பாரிஸ் கார்னர்ல் பதிவு செய்யும் அலுவலகத்தில் சம்பம் நடந்த நாள். இந்த ஜென்மத்தின் மிக அருமையான நாள். எனக்குத் தெரியும் இந்தா 2 வருடம் நாம் இருவரும்  ஒன்றாக பல போராட்டங்களை எதிர்கொண்டோம், வாழ்க்கையை பற்றி பல விஷயங்களைக் கற்றுக்கொண்டோம், ஆனால், நாம் ஒருபோதும் ஒருவருக்கொருவர் கைவிடவில்லை என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். எங்கள் திருமண நாளில் நாங்கள் புன்னகையுடன் எல்லா கஷ்டங்களையும் எதிர்கொள்ள நீங்கள் எனக்கு பலம் கொடுத்தீர்கள்- நான் உங்களுக்கு எவ்வளவு அர்த்தம் என்று காட்ட ஒருபோதும் நீங்கள் தவறவில்லை.
 
நம்ம திட்டம் போட்ட மாதிரி சொந்தமாக ஓரு "சில்வர் கலர் ரோல்ஸ் ராய்ஸ்" வாங்கும் வரைகும் சோர்த்து போக கூடாது. நான் எப்போதும் சொல்வது போல், நம் நிலைமை எதுவாக இருந்தாலும், எப்போதும் உன்னுடன் இருப்பேன். எங்கள் திருமண வாழ்க்கையின் இன்னொரு வருடத்தைத் தொடங்குவதில் மகிழ்ச்சி. இனிய 2 வது திருமண ஆண்டுவிழா  Mr.Cool Husband" என மிகுந்த மகிழ்ச்சியிடன் பதிவிட்டுள்ளார்.