புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 26 செப்டம்பர் 2020 (16:01 IST)

வருங்கால கணவருடன் ரொமாண்டிக் போஸ்… பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ரா வெளியிட்ட புகைப்படம்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் பிரபலமாகியுள்ள நடிகை சித்ரா தனது வருங்கால கணவருடனான புகைப்படங்களை வரிசையாக வெளியிட்டு வருகிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் விஜே சித்ரா. அண்ணன் தம்பிகளுக்கு இடையிலான பாசமான கதையாக இந்த சீரியல் குடும்ப ரசிகர்களை பெற்று ஓஹோன்னு ஓடிக்கொண்டிருந்தது. இதற்க்கிடையில் கொரோனா வைரஸ் காரணமாக படப்பிடிப்புகள் பாதியில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதால் பலரும் தொலைக்காட்சி தொடர்களை மிஸ் பண்ணியுள்ளார். அவர்களுக்காகவே வீட்டில் இருந்தபடியே அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி வித விதமான போட்டோக்களை பதிவேற்றி வருகிறார்.

இந்நிலையில் சித்ரா ஹேமந்த் என்ற தொழிலதிபரை திருமணம் செய்யவுள்ளார். இவர்களுக்கு அண்மையில் நிச்சயதார்த்தம் நடித்து முடிந்துவிட்டது. இந்த இந்த வருட இறுதிக்குள் கல்யாணம் முடிந்து விடும் என்றும் அவர் தெரிவித்திருந்துள்ளார். இதையடுத்து சித்ரா இப்போது தனது வருங்கால துணையோடு எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வரிசையாக சமூகவலைதளங்களில் இறக்கி வருகிறார். அந்த புகைப்படங்கள் ரசிகர்களின் மனம் கவர்ர்ந்து வைரலாகி வருகின்றன.