கூத்தாடி என்று சொன்னவருக்கு பதில் கூறிய விவேக்- ரசிகர்கள் ஆதரவு!
தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான விவேக்கை சீண்டிய நபர் ஒருவருக்கு அவர் சமூகவலைதளத்தில் பதிலடிக் கொடுத்துள்ளார்.
முன்னணி நகைச்சுவை நடிகரான விவேக், சமூகவலைதளங்களில் இப்போது மிகவும் தீவிரமாக இயங்கி வருகிறார். அதையொட்டி ரசிகர்களுடன் அவ்வப்போது உரையாடலும் நடத்தி வருகிறார். அப்படி ஒரு நிகழ்வின் போது நடிகர்களைக் கூத்தாடி என்றும் இழிவுபடுத்தும் நோக்கிலும் வடிவேலுவின் புகைப்படத்தை டிபியாக வைத்திருந்த நபர் பேசிய போது அவருக்கு நறுக்கென்று பதிலளித்துள்ளார் விவேக்.
அவரது பதிலில் கூத்தாடி என்று சொல்லிவிட்டு எங்கள் குடும்பத்தில் ஒருவரின் புகைப்படத்தை ஏன் டிபியாக வைத்துள்ளீர்கள்? என கேள்வி கேட்டுள்ளார். மேலும் கூத்தாடி என்று சொல்வதால் நாங்கள் தாழ்ந்து விடுவதில்லை, பெருமை தான். சிவனே மன்றில் ஆடுவது கூத்துதானே! எனக் கூறியுள்ளார். விவேக்கின் இந்த பதிலுக்கு ரசிகர்களிடம் இருந்து ஆதரவு பெருகி வருகிறது.