திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 11 பிப்ரவரி 2020 (09:36 IST)

வாண்ட்டடா வந்து வாங்கி கட்டிக்கொண்ட விவேக்: ட்ரெண்டான மீம் செய்த வேலை!

சமீபத்தில் ட்ரெண்டாகி வரும் விவேக்கின் மீம் குறித்து விவேக் கேள்வி எழுப்ப அதற்கு கிண்டலான பதில்களை சொல்லி ட்ரெண்டாக்கி உள்ளனர் நெட்டிசன்கள்

சில சமயங்களில் சில படத்தின் காமெடி மீம் டெம்ப்ளேட் மிகப்பெரிய அளவில் ட்ரெண்ட் ஆகும். அதுபோல சமீபத்தில் விவேக்கின் மீம் டெம்ப்ளேட் ஒன்று ட்ரெண்டாகி உள்ளது. ‘எனக்குள்ள ஒரு மிருகம் தூங்குது” என பஞ்ச் பேசி கடைசியில் பூனைக்குட்டியை கோர்ட்டுக்குள் இருந்து எடுத்துக்காட்டி இதுதான் அந்த மிருகம் என்பார் விவேக். இந்த காமெடியின் டெம்ப்ளேட் வைத்து நெட்டிசன்கள் பலர் அரசியல் மற்றும் சினிமா பிரபலங்களை கிண்டல் செய்து மீம் ஷேர் செய்து வந்தனர்.

இதுகுறித்து அறிந்த விவேக் தனது ட்விட்டரில் அந்த டெம்ப்ளேட்டை பதிவு செய்து ” இந்த template இப்போ trend ஆகிறது. இது”வர்றான்;கலாம்கிறான்;மரம் நடுறான்; அப்புறம் நம்மள தண்ணி ஊத்த சொல்லீட்டு போயிர்றான்” என்று trend ஆனால் நன்றாக இருக்குமே!!” என்று கூறியுள்ளார். ஒரு சிலர் அவர் மனக்குறையை போக்கும் வண்னம் அந்த டெம்ப்ளேட்டில் மரம் நடுதல் குறித்த விழிப்புணர்வு மீம்களை தயார் செய்து பதிவிட்டுள்ளனர். ஆனால் சிலர் அவர் மரம் நடுவதில் காட்டும் ஆர்வத்தை சமீபத்திய அரசியல் நிகழ்வுகளில் மக்களுக்காக தனது கருத்தை பதிவு செய்யவில்லை என்பதை குறிப்பிட்டு அதை வைத்து கிண்டல் செய்து மீம் பதிவு செய்துள்ளனர்.