ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: திங்கள், 11 செப்டம்பர் 2017 (06:20 IST)

'விவேகம்' படத்தின் ஆச்சரியமான சென்னை வசூல் விபரம்

அஜித் நடித்த 'விவேகம்' படத்திற்கு ஒருசில ஊடகங்களும், பெய்டு விமர்சகர்களும், சமூக வலைத்தள போராளிகளும் நெகட்டிவ் விமர்சனங்கள் கொடுத்து எப்படியாவது இந்த படத்தை தோல்வி அடைய செய்ய வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு வாங்கிய காசுக்கு வஞ்சகம் இல்லாமல் வேலை பார்த்தனர்.



 
 
ஆனால் ரசிகர்களின் முழு எதிர்பர்ப்பை எந்த படம் பூர்த்தி செய்யவில்லை என்றாலும் வசூலில் தயாரிப்பாளர்கள், விநியோகிஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்களை திருப்தி அடைய செய்துள்ளது.
 
சென்னையில் வெளியான முதல் நாளில் ரூ. 1.12 கோடி வசூல் ஈட்டிய விவேகம், வெளியான 18 நாட்களில் 9.78 கோடி வசூல் செய்துள்ளது. இந்த படத்தின் சென்னை உரிமை ரூ.4.5 கோடிக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் சுமார் ரூ.4 கோடி சென்னைக்கு லாபம் கொடுத்துள்ளது. எனவே 'பாகுபலி 2' படத்திற்கு பின்னர் இந்த ஆண்டின் மிகப்பெரிய லாபம் பெற்றுத்தந்த படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.