ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: வெள்ளி, 8 செப்டம்பர் 2017 (23:36 IST)

அஜித்துக்கு மீண்டும் ஒரு ஆபரேசனா?

தல அஜித் திரைப்படத்தில் எடுத்து கொண்ட கேரக்டருக்காக அதிகபட்ச ரிஸ்க் எடுப்பவர் என்பது தெரிந்ததே. ஆரம்பம் படம் முதலே அவருக்கு படப்பிடிப்பில் பல காயங்கள் ஏற்பட்டு அதன் விளைவாக பல ஆபரேசன்களை செய்து கொண்டவர் தல அஜித். கடைசியாக 'வேதாளம்' படத்தின் படப்பிடிப்பின்போது காயம் ஏற்பட்டதால் அறுவை சிகிச்சை செய்து சுமார் ஆறு மாதங்கள் ஓய்வு எடுத்தார் என்பது தெரிந்ததே



 
 
இந்த நிலையில் 'விவேகம்' படத்திற்காக அதிக ரிஸ்க் எடுத்த சில காட்சிகளில் நடித்ததால் அஜித்துக்கு தற்போது மீண்டும் வலி எடுத்துள்ளதாம். இதனால் மருத்துவரிடம் பரிசோதனை செய்த அஜித், மருத்துவர்களின் ஆலோசனைப்படி மீண்டும் ஒரு ஆபரேசனை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
 
சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை ஒன்றில் நேற்று இந்த ஆபரேசனை நன்கு தேர்ந்த மருத்துவர்கள் செய்ததாகவும், ஆபரேசனுக்கு பின்னர் அஜித் தற்போது நன்றாக இருப்பதாகவும் கூறப்படுகிறது