1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: ஞாயிறு, 10 செப்டம்பர் 2017 (17:01 IST)

தல நடிகரை தட்டித் தூக்கிய அர்ஜுன் ரெட்டி!!

தல நடிகரின் படத்தைவிட, தெலுங்குப் படமான அர்ஜுன் ரெட்டி அமெரிக்காவில் அதிகமாக வசூலித்துள்ளதாம்.


 
 
தென்னிந்தியப் படங்களுக்கு வெளிநாடுகளில் ஓரளவு மவுசு இருக்கிறது. அதுவும், ‘பாகுபலி’க்குப் பிறகு ஆர்வத்துடன் தென்னிந்தியப் படங்களைப் பார்த்து மகிழ்கின்றனர். 
 
தென்னிந்தியாவில் சரியாக ஓடாத படங்கள் கூட வெளிநாடுகளில் கல்லா கட்டும் நிலமையும் இருக்கிறது. அதுவும் அமெரிக்காவில் எத்தனை டாலர் வசூலானது என்பதை இம்மி பிசகாமல் கணக்கு காட்டிவிடுவர்.
 
தல நடிப்பில் சமீபத்தில் வெளியான படத்தை அமெரிக்காவில் வெளியிட்ட நிறுவனம், முதல் நாள் வசூலை மட்டுமே அறிவித்தது. ஆனால், அதன்பிறகு இதுவரை எவ்வளவு வசூல் என்பதை சொல்லவே இல்லை. அங்கு, தல நடிகரின் படம் பயங்கர பிளாப் என்கிறார்கள். 
 
அந்தப் படத்துடன் வெளியான தெலுங்குப் படமான ‘அர்ஜுன் ரெட்டி’, வசூலில் சக்கைபோடு போடுகிறதாம். அமெரிக்காவில் மட்டுமே 5 கோடி ரூபாய்க்கும் மேல் லாபம் என்கிறார்கள்.