புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 26 நவம்பர் 2018 (08:14 IST)

'பேட்ட' சாதனையை ஒரு மணி நேரத்தில் முறியடித்த 'விஸ்வாசம்'

அஜித்தின் 'விஸ்வாசம்' படத்தின் மோஷன் போஸ்டர் நேற்று இரவு எதிர்பாராத வகையில் எந்தவித முன் அறிவிப்பும் இன்றி இன்ப அதிர்ச்சியாக வெளியான நிலையில் இந்த போஸ்டர் தற்போது 12 மணி நேரத்திற்கும் மேலாக டிரண்டிங்கில் உள்ளது.

மேலும் யூடியூப் டிரண்டிங்கில் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ள 'விஸ்வாசம்' மோஷன் போஸ்டர், ரஜினியின் 'பேட்ட' மோஷன் போஸ்டர் சாதனையை ஒருமணி நேரத்தில் தகர்த்துள்ளது.

ரஜினியின் பேட்ட' மோஷன் போஸ்டருக்கு யூடியூபில் 1,43,000 லைக்ஸ்கள் கிடைத்துள்ள நிலையில் அஜித்தின் விஸ்வாசம் மோஷன் போஸ்டருக்கு ஒரே மணி நேரத்தில் 1,57,000 லைக்ஸ்கள் கிடைத்துள்ளது. அதுமட்டுமின்றி இந்த போஸ்டர் தற்போது வரை 2,39,000 லைக்ஸ்கள் பெற்று இந்தியாவிலேயே அதிக லைக்ஸ்கள் பெற்ற மோஷன் போஸ்டர் என்ற சாதனையை பெற்றுள்ளது.

மேலும் யூடியூபில் இந்தியாவில் நம்பர் 1 இடத்திலும், கட்டார் நாட்டில் 8வது இடத்திலும், இலங்கையுஇல் 23வது இடத்திலும் டிரெண்டிங்கில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.