1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 12 ஜனவரி 2019 (16:10 IST)

விஸ்வாசமும் திருட்டு கதையா..?

பொங்கல் விடுமுறையை முன்னிட்டு விஸ்வாசம் மற்றும் பேட்ட ஆகிய படங்கள் வெளியாகியுள்ளது. இவ்விரு படங்கலும் ரசிகர்கள் மத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 
 
இந்நிலையில், விஸ்வாசம் படம் கதைத்திருட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளது. ஆம், சமீபகாலமாக தமிழ் சினிமாவில் திருட்டுகதை விவகாரம் தலைத்தூக்கி வருகிறது. சர்சார் மற்றும் 96 படங்கலும் இந்த பிரச்சனையில் சிக்கியது. தற்போது விஸ்வாசம் சிக்கியுள்ளது. 
 
அதாவது, 2007 ஆம் ஆண்டு வெளியான துளசி படத்தின் மையக்கருவும் விஸ்வாசம் படத்தின் மையக்கருவும் ஒன்றுதானாம். துளசி படத்தில் வெங்கடேஷ், நயன்தாரா ஆகியோர் நடித்திருந்தனர். 
 
10 ஆண்டு இடைவெளி இருப்பதால் திரைக்கதையில் சில மாற்றங்கள் செய்து இருக்கிறார்கள். மையக்கரு இரண்டு படங்களுக்கும் ஒன்றுதான். 
 
ஆனால் டைட்டிலில் கதையை எழுதியவர்களாக சிவா மற்றும் ஆதி நாராயணனின் என பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. அது தெலுங்கு படம் என்பதால் படத்தின் உரிமம் பெற்றுத்தான் படம் எடுத்தார்களா? என்ற கேள்வியும் உருவாகியுள்ளது.