வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 26 பிப்ரவரி 2022 (17:01 IST)

அஜித்தின் அடுத்த பட இயக்குனர் லிஸ்ட்டில் இணைந்த இயக்குனர்… நீண்ட நாள் காத்திருப்புக்குக் கிடைத்த பயன்!

இயக்குனர் விஷ்ணுவர்தன் அடுத்து அஜித் படத்தை இயக்குவதற்கான வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

அஜித்துக்கு பில்லா மற்றும் ஆரம்பம் ஆகிய இரு வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் விஷ்ணுவர்தன். அவர் அதன் பின்னர் பல படங்களை இயக்கினாலும் எந்த படமும் பெரிதாக வெற்றி பெறவில்லை. இந்நிலையில் இப்போது அவர் அஜித்துக்காக எழுத்தாளர் பாலகுமாரனோடு இணைந்து ஒரு வரலாற்றுக் கதையை எழுதி வைத்திருந்தார். ஆனால் ஏனோ அந்த படம் அடுத்த கட்டத்துக்கு நகரவே இல்லையாம்.

இந்நிலையில் இப்போது மீண்டும் அஜித்தை அவர் இயக்குவதற்கான வாய்ப்புகள் அதிகமாகி உள்ளதாக சொல்லப்படுகிறது. வலிமைக்குப் பின் ஹெச் வினோத் அஜித்தை  அடுத்த படத்தில் இயக்குகிறார். அதற்கடுத்த படத்தை இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்க அதிக வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.