திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 26 பிப்ரவரி 2022 (16:29 IST)

மெட்ரோ படத்தோடு ஒப்பிடப்படும் வலிமை… இயக்குனரின் கருத்து என்ன?

சமீபத்தில் வெளியான வலிமை திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று அஜித்தின் வலிமை திரைப்படம் உலகமெங்கும் வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. ஆனால் கொண்டாட்டமெல்லாம் தியேட்டருக்கு உள்ளே செல்லும்வரைதான். அதன் பின் வலிமை திரைப்படம் தன் ரசிகர்களை முழுவதுமாக திருப்திப் படுத்தவில்லை. இதற்குக் காரணம் மேக்கிங்கில் படக்குழு செலுத்திய கவனத்தை கதையிலும் திரைக்கதையிலும் செலுத்தாதே என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் வலிமை படத்தின் கதைக்களம் ஏற்கனவே வந்த மெட்ரோ திரைப்படத்தோடு பெரும்பகுதி ஒத்துப் போவதாக விமர்சனங்கள் எழுந்தன. இரண்டு படங்களிலும் நகைகளை திருடும் காட்சிகளும் ஒன்று போலவே படமாக்கப்பட்டு இருந்ததால் இந்த ஒப்புமை செய்யப்பட்டது.

இந்நிலையில் மெட்ரோ படத்தின் இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இதுகுறித்து தன்னுடைய கருத்தைப் பகிர்ந்துள்ளார். அதில் ‘வலிமை பார்த்துவிட்டு எனது படத்தை ஒப்பிட்டு பலபேர் அழைக்கின்றனர். ஒரு சிறிய இன்ஸ்பிரேஷனாக மட்டுமே இருக்கலாம். இல்லையென்றால் தற்செயலாக இருந்திருக்கலாம். வலிமை திரைப்படம் நன்றாக ஓடிக்கொண்டு தமிழ் சினிமாவுக்கு புத்துணர்ச்சி கொடுத்துக் கொண்டிருக்கிறது. ’ எனக் கூறியுள்ளார்.