வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 19 நவம்பர் 2018 (19:47 IST)

போலீஸாக விஷால் நடிக்கும் அயோக்யா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

சண்டைக்கோழி 2 வெற்றிக்கு பிறகு விஷால் நடித்துள்ள 'அயோக்யா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
லைட் ஹவுஸ் புரொடக்சன்  தயாரிப்பில்,  வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால் நடித்து வரும் படம் அயோக்யா. 
 
இந்த படத்துக்கு சாம் சிஎஸ்   இசையமைத்து வருகிறார். கார்த்திக் வெங்கட்ராமன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.  வரும் 2019ம் ஆண்டு ஜனவரியில் 'அயோக்யா'  படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பீர் பாட்டிலை கையில் பிடித்தபடி போலீஸ் ஜீப்பில் அமர்ந்து விஷால் அமர்ந்து இருக்கும் புகைப்படம் இன்று வெளியாகி உள்ளது.
 
இதில் விஷாலுக்கு ஜோடியாக ராஷி கண்ணா டூயட் பாடி ஆடி வருகிறார். மேலும், முக்கிய வேடங்களில் இயக்குநர்கள் கே.எஸ்.ரவிகுமார் – பார்த்திபன், பூஜா தேவரியா நடித்து வருகிறார்கள்.
 
இது ஜுனியர் என்டிஆர் நடிப்பில் வெளியான டெம்பர் படத்தின் ரீமேக் என கூறப்படுகிறது. காதல், ஆக்சன் கலந்த கமர்சியல் படமாக உருவாகி வருகிறது.