செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 14 நவம்பர் 2018 (18:46 IST)

நியூஸ் ஜெ தொலைக்காட்சியை மறைமுகமாக தாக்கிய விஷால்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருக்கும் வரை அதிமுகவின் அதிகாரபூர்வ தொலைக்காட்சியாக இருந்த ஜெயா டிவி தற்போது டிடிவி தினகரன் வசம் சென்றுவிட்டதால், அதிமுகவுக்கு என தனி தொலைக்காட்சி இல்லாத நிலை இருந்தது.

இந்த நிலையில் இன்று முதல் அதிமுகவின் அதிகாரபூர்வ சேனாலாக 'நியூஸ் ஜெ' என்ற தொலைக்காட்சியின் ஒளிபரப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட பல அதிமுக பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் இந்த புதிய சேனல் குறித்து நடிகர் விஷால் தனது டுவிட்டரில் கூறியாபோது, 'இன்று முதல் மற்றுமொரு செய்தி சேனல் தொடங்கப்பட்டுள்ளது. அபாரம். ஒரு செய்தி சேனல் ஆரம்பிக்க நிறைய செலவாகும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் மாத சம்பளம் வாங்கும் எம்.எல்.ஏ,  எம்.பிக்கள் எப்படி இது போன்ற ஒரு வியாபார அமைப்பை தொடங்க முடிகிறது? 2019-க்காக காத்திருக்கின்றேன்" என்று மறைமுகமாக நியூஸ் ஜெ தொலைக்காட்சியை தாக்கி விமர்சனம் செய்துள்ளார்.

ஏற்கனவே 'சர்கார்' விவகாரத்தில் நடிகர்கள் மீது கடுப்பில் அதிமுக இருக்கும் நிலையில் விஷாலின் இந்த டுவிட்டர் பதிவு மேலும் ஆத்திரத்தை கிளப்பும் என்பதில் சந்தேகம் இல்லை.