விஷாலின் ‘மார்க் ஆண்டனி’: மாஸ் போஸ்டர் ரிலீஸ்!
விஷால் நடித்து வரும் மார்க் ஆண்டனி என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் மாஸ் போஸ்டர் சற்றுமுன் வெளியாகியுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த படத்தில் நாயகனாக நடித்து வரும் விஷாலின் வித்தியாசமான கெட்டப் போஸ்டர் வெளியாகி வைரல் ஆனது
இந்த நிலையில் சற்று முன் இந்த படத்தில் வில்லனாக நடித்து வரும் எஸ்ஜே சூர்யாவின் மாஸ் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகி வரும் இந்த படம் இவ்வருட இறுதியில் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் ரிதுவர்மா நாயகியாக நடித்து வருகிறார்.
Edited by Siva