என்ன ஓவரா பண்ணிட்டு இருக்கீங்க: நீதிமன்றத்தை நாடிய விஷால்!!!
தயாரிப்பாளர் சங்கத்திற்கு தனி நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தயாரிப்பாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர் விஷால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் விஷால் தலைமையிலான அணி வெற்றி பெற்று பொறுப்பு வகித்து வருகிறது. இந்நிலையில் தயாரிப்பாளர் சங்கத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் கணக்கு வழக்குகள் முறையாக சமர்ப்பிக்கப்படவில்லை எனவும் நிர்வாகத்தின் மீது குற்றச்சாட்டு வைக்கபபட்டது.
இது சம்மந்தமாக தயாரிப்பாளர்கள் சிலர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து புகார் மனு அளித்தனர். இதையடுத்து இது சம்மந்தமாக நடைபெற்ற விசாரணையில் கணக்கு வழக்குகள் முறையாக சமர்ப்பிக்கப்படவில்லை என்பது உறுதியானது.
இதனால் தமிழக அரசு விஷாலின் தலைவர் பதவியை பறித்தது. அத்தோடு சங்க நிர்வாகங்களை கவனிக்க என்.சேகர் என்ற அதிகாரியையும் நியமித்து உத்தரவிட்டது.
இதனால் கடும் கோபத்தில் இருக்கும் விஷால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். சங்கத்தில் தனி அதிகாரியை நியமித்தது தவறு. அவரது நியமனத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று விஷால் கோரிக்கை வைத்துள்ளார். தமிழக அரசின் இந்த நடவடிக்கை முற்றிலும் கண்டிக்கத்தக்கது எனவும் அவர் கூறியுள்ளார்.