காதலியுடன் காதலர் தினத்தன்று விஷால் செய்த வேலை!! வைரலாகும் புகைப்படம்...
காதலர் தினத்தை முன்னிட்டு விஷால் தனது காதலியும் வருங்கால மனைவியுமான அனிஷாவுடன் காதலர் தினத்தை கொண்டாடியுள்ளார்.
தமிழ்ப் பட உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் விஷால் . இவர் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவராகவும், தென் இந்திய நடிகர்கள் சங்கப் பொதுச்செயலாளராகவும் இருந்து வருகிறார்.
விஷால், ஐதராபாத்தை சேர்ந்த தொழில் அதிபர் தினேஷ் ரெட்டி-சவீதா தம்பதியின் மகள் அனிஷாவை திருமணம் செய்து கொள்ள இருக்கும் அதிகாரப்பூர்வ தகவல் சமீபத்தில் வெளியானது. அனிஷா அர்ஜுன் ரெட்டி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் காதலர் தினமான நேற்று, விஷால் தனது காதலியுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் ஹேப்பி வேலட்டைன்ஸ் டே அனிஷா என குறிப்பிட்டுள்ளார். இதனைப்பார்த்த ரசிகர்கள் பலர் இருவருக்கும் வாழ்த்து சொல்லி வருகின்றனர்.