செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: ஞாயிறு, 17 அக்டோபர் 2021 (11:48 IST)

இன்று மாலை ‘விஷால் 32’ படத்தின் டைட்டில் அறிவிப்பு!

விஷால் நடித்து வரும் ’வீரமே வாகை சூடும்’ மற்றும் ’துப்பறிவாளன் 2’ ஆகிய திரைப்படங்களின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ’விஷால் 32’ என்ற திரைப்படத்தின் விஷால் நடித்து வருகிறார். இந்த படத்தை விஷாலின் நெருங்கிய நண்பர்களான ராணா மற்றும் ரமணா ஆகியோர் தயாரித்து வருகின்றனர் என்பதும் இந்த படத்தை வினோத் குமார் என்பவர் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 
சாம் சிஎஸ் இசையமைத்து வரும் இந்த படத்தில் நாயகியாக சுனைனா நடித்து வருகிறார் என்பதும் 12 ஆண்டுகளுக்குப் பின்னர் அவர் விஷாலுடன் இணைந்து நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் டீசர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இதனை அடுத்து விஷால் ரசிகர்கள் இந்த படத்தின் டைட்டிலை மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது