இணையத்தில் வைரலாகும் அமலா பால் தம்மடிக்கும் வீடியோ
ஏ.எல் விஜய் உடனான விவாகரத்திற்கு பிறகு நடிகை அமலா பால் படங்களில் முழு கவனம் செலுத்தி வருகிறார். அவரின் மார்க்கெட் சூடி பிடிக்க ஆரம்பித்துள்ளது.
அமலா பால் சுசி கணேசன் இயக்கத்தில் பிரசன்னா, பாபி சிம்ஹா உள்ளிட்டோருடன் சேர்ந்து திருட்டுப் பயலே 2 படத்தில் இறுதிக்கட்ட பணிகளில் உள்ளார். அண்மையில் நடந்த இசை வெளியீட்டு விழாவுக்கு கவர்ச்சியாக உடை அணிந்து வந்ததால் நெட்டிசன்கள் அவரை கலாய்த்து மீம்ஸ் போட்டனர்.
அதுமட்டுமின்றி தற்போது அமலா பால் புகைப்பிடிப்பது போல் ஒரு வீடியோ வைரலாகி வருகின்றது, இதைக்கண்ட ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வீடியோவில் தம்மடித்து மூக்கு வழியாக புகை விடும் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.