ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 13 ஜூன் 2022 (12:53 IST)

மிடிள் கிளாஸ் மக்களின் போராட்டத்தை சொல்லும் விமலின் அடுத்த படம்… தலைப்போடு வெளியான அறிவிப்பு

நடிகர் விமல் நடிப்பில் சமீபத்தில் ரிலீஸான வெப் சீரிஸ் வெற்றியை பெற்றதை அடுத்து மீண்டும் அவர் மார்க்கெட் ஏறுமுகத்தில் செல்கிறது.

களவாணி படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களைக் கவர்ந்த விமல், தொடர்ந்து கிராமத்துக் கதையம்சம் கொண்ட படங்களாக நடித்து வந்தார். அதில் ஒரு சில படங்களை தவிர மற்ற படங்கள் தோல்வி அடைந்ததால் கடந்த சில வருடங்களாக அவர் கைவசம் படங்கள் எதுவும் இல்லாத நிலை உருவானது.

இந்நிலையில் அவர் நடித்துள்ள விலங்கு என்ற வெப்சீரிஸ் ஜி 5 தளத்தில் வெளியாக உள்ளது. இந்த படத்தை புரூஸ் லி படத்தை இயக்கிய பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கியுள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் தயாரித்துள்ளார். இந்த வெப் தொடர் நீண்ட நாட்களுக்குப் பிறகு விமலுக்கு ஒரு கம்பேக்காக அமைந்துள்ளது. இதனால் நீண்ட நாட்களாக முடித்து வைக்கப்பட்டு வியாபாரம் ஆகாமல் இருந்த விமலின் படங்கள் எல்லாம் இப்போது தூசுதட்டப்பட்டு ஒவ்வொன்றாக வியாபாரம் ஆகிக் கொண்டு இருக்கிறது. விரைவில் ஒவ்வொன்றாக வெளியாகும் என சொல்லப்படுகிறது.

இதையடுத்து தற்போது விமல் நடிப்பில் அடுத்து மஞ்சள் குடை என்ற படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை கடமையை செய் படத்தைத் தயாரித்துள்ள கணேஷ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. மிடில் கிளாஸ் மக்களின் போராட்டமாக இருக்கும் சொந்த வீடு வாங்குவது சம்மந்தமான போராட்டத்தை சொல்லும் படமாக மஞ்சள் குடை உருவாகி வருகிறது.