செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 10 ஜூன் 2022 (16:38 IST)

கொரோனாவை தடுக்க விலங்குகளுக்கும் தடுப்பூசி! – மத்திய அரசு அறிவிப்பு!

இந்தியாவில் கொரோனா பரவல் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் விலங்குகளை கொரோனாவிலிருந்து காக்க தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டு முதலாக கொரோனா பரவல் இருந்து வரும் நிலையில் பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதை தீவிரப்படுத்தியுள்ளன.

இந்நிலையில் விலங்குகளுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ள நிலையில் தற்போது விலங்குகளுக்காக அனோகோவாக்ஸ் என்ற தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த தடுப்பூசி விலங்குகளுக்கு டெல்டா மற்றும் ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ்களை எதிர்க்கும் சக்தியை அளிக்கும் என கூறப்பட்டுள்ளது.