புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 4 பிப்ரவரி 2022 (19:03 IST)

விமல் நடித்த முதல் வெப்சீரிஸ் ‘விலங்கு’ டிரைலர்!

விமல் நடித்த முதல் வெப்சீரிஸ் ‘விலங்கு’ டிரைலர்!
தமிழ் திரை உலகின் ஹீரோக்களில் ஒருவரான விமல் நடித்த முதல் தொடர் விலங்கு ட்ரைலர் சற்றுமுன் வெளியாகியுள்ளது
 
அனிருத் மற்றும் சிவகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இந்த தொடர் த்ரில் கதையம்சம் கொண்டது என்பது இந்த ட்ரைலரில் இருந்து தெரிய வருகிறது 
காவல்துறை அதிகாரியாக விமல் நடித்துள்ள இந்த தொடரில் கொலை ஒன்றை அவர் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஏற்படும் தடங்கல்கள் சிக்கல்கள் ஆகியவை தான் இந்தத் தொடரின் கதை என்பது குறிப்பிடத்தக்கது
 
 ஜி ஓடிடி தளத்தில் வரும் 18ஆம் தேதி ஒளிபரப்பாக உள்ள இந்த வெப் தொடர் நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
பிரசாந்த் பாண்டியராஜன் என்பவர் இயக்கத்தில்அஜீஷ் இசையில் உருவாகியுள்ள விலங்கு தொடரில் விமலுடன் இனியா, முனிஷ்காந்த், பால சரவணன், RNR மனோகர், ரேஷ்மா ஆகியோர் நடித்துள்ளனர்.