செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 24 டிசம்பர் 2021 (16:57 IST)

மீண்டும் இணைந்த சமந்தா-டிகே: ‘தி பேமிலிமேன் 3’ ஆரம்பமா?

‘தி பேமிலிமேன் 2’ என்ற தொடரை இயக்கிய இயக்குனர் டீகே மற்றும் ராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் அடுத்த தொடரில் நடிக்க சமந்தா ஒப்பந்தம் ஆகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
அமேசான் ஓடிடியில் சமீபத்தில் வெளியான ‘தி பேமிலிமேன் 2’ என்ற தொடரில் சமந்தா முக்கிய வேடத்தில் நடித்து இருந்தார் என்பதும் இந்த தொடருக்கு ஒரு சில எதிர்ப்புகள் வந்தாலும் இந்த தொடர் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் ராஜ் & டிகே இயக்கத்தில் உருவாக இருக்கும் அடுத்த தொடரிலும் நடிக்க சமந்தா ஒப்பந்தம் ஆகி உள்ளதாகவும் இந்த தொடரில் பிரபல பாலிவுட் நடிகர் வருண் தவான் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது 
 
ஆனால் இந்த தொடர் ‘தி பேமிலிமேன் 2’ தொடரின் அடுத்த பாகமா அல்லது புதிய கதையா என்பது குறித்த தகவல் இன்னும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது