புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By mahendran
Last Modified: வெள்ளி, 15 அக்டோபர் 2021 (11:37 IST)

கமலின் விக்ரம் படத்தில் யுடியூப் பிரபலங்கள்…!

கமல் நடித்து வரும் விக்ரம் படத்தில் வில்லேஜ் குக்கிங் சேனல் பிரபலங்கள் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவரான பெரியதம்பி தாத்தாவும், சில இளைஞர்களும் சேர்ந்து கிராமத்து சமையல் செய்யும் யூட்யூப் சேனல் ஒன்றை கடந்த 2018ம் ஆண்டு தொடங்கினர். அவர்களுடைய நகைச்சுவையான பேச்சும், பாரம்பரிய கிராம சமையலும் பலரை ஈர்க்கவே கடந்த மூன்று ஆண்டுகளுக்குள் 1 கோடி சப்ஸ்க்ரைபரை பெற்ற முதல் யூட்யூப் சேனலாக டைமண்ட் கேடயத்தை பெற்றுள்ளது வில்லேஜ் குக்கிங் சேனல்.

இந்நிலையில் பத்தோடு பதினொன்றாக இருந்த சேனலுக்கு கடந்த தேர்தலின் போது காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வருகை தந்து அவர்களோடு சமைத்து சாப்பிட்ட வீடியோவுக்குப் பின்னரே அதிகளவில் சப்ஸ்க்ரைபர் எண்ணிக்கை அதிகமானது.
இந்நிலையில் இவர்கள் இப்போது நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் விக்ரம் திரைப்படத்தில் சில காட்சிகளில் நடித்துள்ளார்களாம். இவர்களின் காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.