1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 20 ஆகஸ்ட் 2022 (09:04 IST)

சினிமாவில் இருந்து விரைவில் ஓய்வு… நடிகர் விக்ரம் திடீர் அறிவிப்பு

நடிகர் விக்ரம் தற்போது கோப்ரா மற்றும் பொன்னியின் செல்வன் ஆகிய படங்களின் ரிலீஸுக்காக காத்திருக்கிறார்.

கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக படப்பிடிப்பு நடந்துவந்த  ‘கோப்ரா’ படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்னர் முடிவுற்றது. பின் தயாரிப்பு பணிகள் தற்போது நடந்து வரும் நிலையில் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பின்னர் தேதி ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது.

இந்த ரிலீஸூக்குப் பிறகு ஒரு மாத இடைவெளியில் அவர் நடித்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் ரிலீஸ் ஆகிறது. இதற்கிடையே நேற்று இந்த படத்தின் சோழா சோழா பாடல் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்துகொண்ட விக்ரம் விரைவில் சினிமாவில் இருந்து ஓய்வுப் பெறப்போவதாக அறிவித்துள்ளார். அவரின் இந்த பேச்சு சினிமா ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.