திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 19 ஆகஸ்ட் 2022 (15:12 IST)

கோப்ரா டிரைலர் எப்போ வரும்… நேரடியாக விக்ரம் வெளியிட்ட அறிவிப்பு

நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள கோப்ரா திரைப்படம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக படப்பிடிப்பு நடந்துவந்த  ‘கோப்ரா’ படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்னர் முடிவுற்றது. பின் தயாரிப்பு பணிகள் தற்போது நடந்து வரும் நிலையில் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பின்னர் தேதி ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது.

இதற்கிடையில் விக்ரம் மீண்டும் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தன. அதை தற்போது விக்ரம் உறுதிப் படுத்தியுள்ளார். சமீபத்தில் டிவிட்டர் ஸ்பேஸில் கோப்ரா படக்குழுவினருடன் நடந்த உரையாடலில் கலந்துகொண்ட விக்ரம் இதை உறுதிப்படுத்தியுள்ளார். இந்த படத்தை ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த நிகழ்வில் விக்ரம் கோப்ரா டிரெய்லர் எப்போது வெளியாகும் என்பதையும் அறிவித்துள்ளார். பட ரிலீஸூக்கு 10 நாட்கள் முன்னர் டிரைலர் வெளியாகும் என அவர் கூறியுள்ளார். இன்னும் சில தினங்களுக்குள்ளாக டிரைலர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.